நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 48வது லீக் போட்டி, நேற்று (மே 05) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது.
ராகவா லாரன்சுக்கு இணையாக உதவி செய்யும் விஷ்ணு விஷால்… குவியும் பாராட்டுக்கள்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 118 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சாம்சன் 30 ரன்களுடனும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அக்மத் 2 விக்கெட்டுகளையும், ஷமி, ஹர்திக் பாண்டியா, ஜோஷுவா லிட்டில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 13.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!
குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக, விரித்திமான் சஹா 41 ரன்களையும், சுப்மன் கில் 36 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 39 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மிகச்சிறந்த வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது; இதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.