கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் தீவிரத்தை உணர்ந்து கொரோனா பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் சுமார் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்; கோடிக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். நோய் பரவலைத் தடுக்கும் வகையில் 2019- ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவை அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது. சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன.
பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை
தற்போது உலக நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் நிலையில், பல்வேறு தொகுப்புகளைக் கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் மருத்துவ அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதேநேரம், கொரோனா நோய்த்தொற்று முடிந்துவிட்டதாக கருத வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.