Homeசெய்திகள்அரசியல்ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம்- தமிழிசை

ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம்- தமிழிசை

-

ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம்- தமிழிசை

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? என துணைநிலை ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டும் ஆளுநர் வேண்டும். ஆளும் கட்சியாக இருந்தால் வேண்டாமா? எதிர்க்கட்சியாக இருந்த போது ராஜ்பவன் வாசலை மிதிக்காமல் இருந்திருக்கலாமே? எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளுநரை நாடி செல்வதும், ஆளுங்கட்சியான பின் ஆளுநரை விமர்சிப்பதும், ஆளுநர் பதவி தேவையில்லை என தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்வதும் யார்? ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம். கருத்து சுதந்திரம் என்பது ஆளுநர்களுக்கும் உண்டு. அவர்கள் கருத்து கூற அனைத்து உரிமைகளும் இருக்கிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறுவது உண்மை அல்ல. குறை இருந்தால் சொல்லுங்கள் சரி செய்து கொள்ளலாம். தமிழகத்தில் வேலையில்லாமல் ஜிப்மரை எதிர்த்து திருமாவளவன் போராட்டம் நடத்துகிறார். விழுப்புரம் எம்.பி. ஏன் இங்கு வந்து உட்கார்ந்துள்ளார். அவருக்கு முகவரி என்ன புதுச்சேரியா? முதலில் அவர்களது தொகுதி வேலையை பார்க்க சொல்லுங்கள்” என சாடினார்.

MUST READ