Homeசெய்திகள்சினிமாஷாருக் கான், அட்லீ கூட்டணியின் ‘ஜவான்’... ரிலீஸ் தேதி ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா!

ஷாருக் கான், அட்லீ கூட்டணியின் ‘ஜவான்’… ரிலீஸ் தேதி ஒரு வழியா சொல்லிட்டாங்கப்பா!

-

- Advertisement -

ஷாருக் கான், அட்லீ கூட்டணியின் ‘ஜவான்’ பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அட்லீ தற்போது இந்தி பக்கம் சென்று ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

jawan
jawan

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜவான் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அல்லது விஜய் இருவரில் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஏராளம் இருப்பதால் இன்னும் சில கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதான் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த ஷாருக் கான் அடுத்து ஜவான் மூலம் பிளாக்பஸ்டர் கொடுக்கத் தயாராகி வருகிறார்.

MUST READ