நாளை முதல் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை காலை 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
“உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு”
விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாயாகும். தேர்வர்கள், விடைத்தாள் நகலுக்கான கட்டணத்தை தேர்வெழுதிய பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.