Homeசெய்திகள்ஆன்மீகம்பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

-

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்
சித்திரை தேரோட்டம்

 

தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல் கடந்த 6-ந்தேதி கருட சேவை கோபுரவாசல் தரிசனம், ஏகாந்த சேவை,  அம்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

சித்திரை தேரோட்டம் விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற பத்தாந்தேதி (புதன்கிழமை) காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை ஐந்து மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளல்,  காலை ஏழு மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற பன்னிரெண்டாந்தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரியும்,  அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

MUST READ