பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின்கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிவருபவர் விடுதலை சிகப்பி. இவர் கடண்ட்மாதம் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டு பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது. அதில், இந்து மதத்தை பின்பற்றுவோரின் மந்தை புண்படுத்தும் வகையிலும், நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின்பேரில், விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.