Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்....பா.ஜ.க. அதிர்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!

-

 

Photo: Odisha CM Official Twitter Page

நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், இன்று (மே 10) ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்திக்கவுள்ளார்.

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு

கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. உடன் உறவை முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இதனை தொடர்ந்து, ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசியுள்ளார். இதேபோல், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை இன்றும், நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும் நிதிஷ்குமார் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம்!

வரும் மே 18- ஆம் தேதி அன்று டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ