Homeசெய்திகள்தமிழ்நாடுவிலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்

விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்

-

- Advertisement -
விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் விலை நிலங்களில் தேங்கிய மழை நீர் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்

கள்ளக்குறிச்சியில் கூத்தக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 325 ஏக்கருக்கு மேல் கோ 51 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் கூத்தக்குடி பகுதியில் 100 ஏக்கர் விலை நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

விலை நிலங்களில் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரியில் போச்சம்பள்ளி, சந்தூர், மகாதேவ கொள்ளஅள்ளி, தட்டக்கல், அனகோடி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.

வயல் வழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

MUST READ