தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் வாழை அதிகளவில் பயிரப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார் மற்றும் வாழை இலைகள், தூத்துக்குடி காய்கறி சந்தையில் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், வாழைத்தார் மற்றும் வாழை இலையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
350 ரூபாய்க்கு விற்கப்படும் கற்பூரவள்ளி 230 ரூபாயாகவும், 4,000 ரூபாய்க்கு விற்பனையாகும் பெரிய கட்டு வாழை இலை 700 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது.
சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் காட்டு யானை
அக்னி நட்சத்திரம் காரணமாக, தற்போது விழாக்கள் குறைந்திருப்பதாகவும், வைகாசியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் என்பதால், நல்ல விலை கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.