Homeசெய்திகள்தமிழ்நாடுமீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

 

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1.28 கோடி கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், நடப்பாண்டு சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் விழாவில் கலந்துக் கொண்டனர். குறிப்பாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில், மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் முக்தீஸ்வரர் கோயில் உள்பட 10 உப கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் ரொக்கம், 715 கிராம் தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 261 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதனை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.

MUST READ