Homeசெய்திகள்சினிமாஇராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

-

இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் புதிய அப்டேட்களை அறிவித்த படக்குழு.

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்’. நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

இப்படத்தின் First look போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் `இராவண கோட்டம்’ படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தில் நடிகை கயல் ஆனந்தி இந்திரா என்னும் கதாபாத்திரத்திலும் திபா ஷங்கர் காளியம்மாவாகவும் நடித்துள்ளதாக போஸ்டர் ஒன்ரை படக்குழு வெளியிட்டது.

இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

இதற்கு முன்பு சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ