
பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி ஆறு டன் எடைக் கொண்ட தேரை தோள்களில் சுமந்து செல்லும், தூக்குத் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் சூர மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தூக்குத் தேர் திருவிழா, நேற்று (மே 11) நடைபெற்றது.
சூர மாகாளியம்மன் தேருக்கு சக்கரம் இல்லை எனவே, பக்தர்களே சக்கரமாக மாறி ஆறாயிரம் கிலோ எடைக் கொண்ட தேரை தாரைத் தப்பட்டை முழங்க, தங்களது தோளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி வந்தனர்.
அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே உருவாக்கியுள்ளோம்… ‘இராவணக் கோட்டம்’ குறித்து படக்குழு!
இந்த தேர் திருவிழாவைப் பார்க்க, அமெரிக்கா, மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.