Homeசெய்திகள்சினிமாஉண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே... ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!

உண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே… ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!

-

- Advertisement -

கேரளா பகுதிகளில் (முஸ்லீம்) திருமணங்கள் குறித்த தனது கருத்தை திரித்துவிட்டார்கள் என்று நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மலபார் பகுதிகளில் (முஸ்லீம்) திருமணங்கள் குறித்த சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலான போது நடிகை நிகிலா விமல் அதுகுறித்து கருத்து தெரிவித்தார்.

தான் பூர்வீகமாக இருக்கும் கண்ணூரில், முஸ்லிம் குடும்பங்களில் திருமண நிகழ்ச்சிகளின் போது பெண்களுக்கு சமையல் அறையில் உணவு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும்  மலபார் முஸ்லீம் குடும்பங்கள் வீட்டின் மருமகனை எவ்வளவு வயதானாலும் புய்யாப்லா (புது மணமகன்) என்று அழைக்கும் நடைமுறையை பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. “எங்கே சொன்னது என்று கூட தெரியாமல் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கண்ணூரின் தனித்துவம் குறித்து தான் கூறிய சிறிய பகுதியை மட்டும் ஊடகங்கள் எடுத்து அதை தவறான முறையில் பரப்பியுள்ளனர் என்று டெஹ்ரிவித்துள்ளார்.

“உங்களுக்கு கிடைத்த ஒரு தகவலை உண்மையா என்று கூட பார்க்காமல் நீங்கள் நீங்கள் அதை பகிர்ந்து வருகிறீர்கள். இதுகுறித்து பல சர்ச்சையை எழுப்பிவிட்டுள்ளீர்கள். இது குறித்து மேலும் எந்த விளக்கமும் அளிக்கப் போவதில்லை. நான் என்ன சொன்னேன் என்று இதுவரை எந்த நிருபரும் என்னிடம் கேட்கவில்லை. நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ