
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். முடிவடைந்ததும் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிடுவதற்கான பணிகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டுள்ளது. எல்லை பிரச்சனை காஷ்மீர் விவகாரம், தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் ஐ.சி.சி. தொடர்களைத் தவிர, இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தவிர்த்து வருகின்றனர்.
கடைசியாக 2012- ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, வரும் அக்டோபர் 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் நடத்தப்பட உள்ளன. ஆனால் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறினால் அகமதாபாத்தில் விளையாட வேண்டியிருக்கும். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜம் சே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே… ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!
இது குறித்து பேட்டியளித்த அவர், இந்தியா- பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத்தில் நடத்துவதை விட, சென்னை (அல்லது) கொல்கத்தாவில் நடத்துவது சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அகமதாபாத்தில் விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார்.