கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ளது.
காங்கிரஸ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, நாளை (மே 14) காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, “கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் வெற்றிக்காக, கடந்த நான்கு மாதங்களாக ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன். எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.