Homeசெய்திகள்கட்டுரைகர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது

-

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது

கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று  மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

 கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் கடந்த 10ந் தேதி நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் என்று மும்முனை போட்டிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையில் மட்டுமே நேரடி போட்டியாக இருந்தது.

இதில் 73.91 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. மே-13 தேதி காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.

காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இளையத் தலைவர் ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டமக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது.

வெறுப்பு அரசியலையும், மதவாத அரசியலையும் மக்கள் வெறுக்க தொடங்கினர்.

ராகுல் காந்தி நடைப்பயணம்

மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, மோடி சமுதாயத்தை இழிவு படுத்தி விட்டதாகக் கூறி குஜராத் கீழ்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தனர். அவர் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த அரசு வீட்டை காலி செய்ய வைத்தனர். இவை அனைத்தும் கர்நாடகா மக்கள் மத்தியில் ராகுல்காந்தி மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் அணுதாபத்தை ஏற்படுத்தியது.

ராகுல்காந்தி 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த அரசு வீடு

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை முறியடிக்க பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலத்திற்கு 27 முறை சென்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது என்றார், தீவரவாதத்திற்கு துணை போகிறது என்றார். அப்போதும் மோடியை நம்புவதற்கு கர்நாடகா மக்கள் தயாராக இல்லை என்பதை அறிந்து கொண்டார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் என்னை 91 முறை அவமானப் படுத்தி விட்டது என்றும் தீவிரவாதிகளுடன் இணைந்து எனக்கு எதிராக சதி செய்வதாகவும் அதிரடியாக  பேசினார். நிறைய கதைகளை அவிழ்த்து விட்டார்.

மோடி, கர்நாடகா மாநிலத்திற்கு 27 முறை சென்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

“தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படத்தை ஆதரித்து கர்நாடகா மக்களிடம் பேசினார். நாட்டின் பிரதமர் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளராக மாறி வியாபாரம் செய்தார்.

The Kerala Story

கேரளா மாநிலம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் உறவு முறைகளோடு அழைத்துக் கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையை சிதைக்க பிரதமர் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அதனை கர்நாடகா மக்கள் நம்பவில்லை. பிரதமர் மோடி பேசியதில் எதுவும் உண்மையில்லை என்று தேர்தல் மூலமாக தெளிவு படுத்தி விட்டார்கள்.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் பாஜக ஆட்சியில் இருந்தது. தற்போது அதையும் காங்கிரஸ் கைப்பற்றி பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு முடிவுகட்டி விட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டதை இந்த வெற்றி உணர்த்துகிறது.

– என்.கே.மூர்த்தி

MUST READ