Homeசெய்திகள்இந்தியாஎந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!

எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!

-

 

எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!
Photo: INC

மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவியது.

கர்நாடகா மாநிலத்தை அதிகமுறை ஆட்சி செய்த கட்சி எது தெரியுமா?- விரிவான தகவல்!

பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு வரை நீடித்தது. இந்த நிலையில், 224 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுளளன என்பது குறித்த முழு பட்டியலையும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Photo: ECI

பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா 1 தொகுதியிலும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!

மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள், கடந்த 2018- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், தற்போது மிக குறைவான தொகுதிகளே கைப்பற்றியுள்ளனர்.

MUST READ