Homeசெய்திகள்கட்டுரைஎண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு - 2

எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு – 2

-

எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு

– என்.கே. மூர்த்தி

கனவு காணுங்கள் என்கிறார் டாக்டர் A.P.J. அப்துல் கலாம். கனவுகளும், கற்பனைகளும் தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. கனவுகளும், கற்பனைகளும் தான் அறிவையும் விரிவடைய செய்கிறது“.

நமது எண்ணங்கள், உள் மனதால் படம் பிடிக்கும் காட்சிகளைக் கொண்டு அப்படியே நம் வாழ்க்கையை கட்டமைக்கிறது. நம் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது. நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மனதளவில் வரைபடம் வரைந்து விட்டால் அதுவே நமது வாழ்க்கையாக அமைகிறது. அது மாறவே மாறாது.

 எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு - 2

எண்ணம் போல் வாழ்க்கை என்கிறோம். நினைத்தவாறு மனிதன் இருக்கிறான் என்கிறது பைபிள்”.

நமது வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கற்பனையில் மனக்காட்சி மூலம் படம் பிடித்து விட்டோம் என்றால் அதுவே எண்ணமாக மாறுகிறது என்கிறார் ஓஷோ. அந்த எண்ணம் ஒருபோதும் ஏமாற்றாது.

நாம் இப்போது செய்ய வேண்டியது மனக்காட்சி மூலம் எதிர்கால வாழ்க்கையை படம் வரைவது.

ஒரு சாதாரண ஏழை, தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வரக்கூடியவர். அவர் ஒரு அரண்மனை வாசலில் நின்று கற்பனை செய்கிறார். நாமும் இதுபோல் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்.

இரவு முழுவதும் அந்த அரண்மனையின் தோற்றம், அழகு, கட்டிடத்தின் நேர்த்தி ஆகியவற்றை மனதிற்குள் நினைத்து தூக்கத்தை தொலைக்கிறார். கனவு காணுங்கள் உங்களை தூங்கவிடாமல் தொல்லைத் தரும் கனவே உண்மையான கனவு.

 எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு - 2

அடுத்த நாள் அந்த கூலி தொழிலாளிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அந்த அரண்மனைக்குள் கட்டிடத்தை பழுது பார்க்கும் வேலை கிடைத்தது. அந்த அரண்மனையில் வாரக்கணக்கில் வேலை செய்தார். அந்த அரண்மனையின் பரப்பளவு, வாசல்களின் எண்ணிக்கை, கட்டிடத்தின் வடிவமைப்பு என்று அனைத்தையும் மனக்காட்சியில் படம் பிடித்துக் கொண்டார்.

காலையில் கொத்தனார் வேலை, மாலையில் மூட்டை தூக்கி இறக்கும் வரை வேலை என்று இரவு பகல் பாராமல் உழைத்தார். உழைப்பு மட்டுமே உயர்வை தரும் என்று நம்பினார். அதிலிருந்து பின் வாங்காமல் கடுமையாக உழைத்தார்.

 எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு - 2

சிறுக சிறுக பணத்தை சேர்த்து ஒரு நிலத்தை வாங்கினார். மீண்டும் கடுமையாக உழைத்தார். உழைத்துக்கொண்டே இருந்தார். அப்போது அந்த உழைப்பாளர் இருக்கும் திசையை நோக்கி அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியது. அவர் வாங்கிப் போட்ட நிலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை வந்தது. அவர் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

காலப்போக்கில் ஏழை உழைப்பாளி வளர்ச்சியின் முன் அரண்மனை சிறியதானது. நாம் என்ன நினைத்தோமோ அதன்படி தான் நம் வாழ்க்கை அமைகிறது என்றார் புத்தர். நம் உள் மனதின் கண்ணாடியாக எண்ணங்கள் செயல்படுகிறது.

நமது உள் மனதில் தீவிரமாக ஓடுகின்ற மனக்காட்சியை வாழ்க்கையில் நிகழ்கின்ற வெற்றி தோல்விகள் என்று மனோத்தத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் கூறுகிறார்.

 எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு - 2

எண்ணங்கள் தான் உலகை ஆளுகின்றன என்று அமெரிக்க அறிஞர் எமர்ஸன் சொல்கிறார். நமது மனக்காட்சிக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது என்று நம்பிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும்.

மனதில் தோன்றும் எண்ணங்களும், கற்பனைகளும் (மனக்காட்சிகள்) நம்மை தொடர்ந்து ஆட்சி செய்யும் கண்ணுக்குத் தெரியாத சக்தி. மனக்காச்சி தான் நம் வாழ்வை கட்டுப்படுத்துகிறது. வெற்றியை கற்பனை செய்வோம், வெற்றி பெற்ற பெரும் சாதனையாளர்களின் மனதிற்குள் படமாக காண்போம். நமது எண்ணம் சக்தியாக உருவெடுக்கும், அதுவே நம்மை சாதனையாளராக உயர்த்தும்.

தொடரும்…

MUST READ