Homeசெய்திகள்சினிமாதீபாவளிக்கு சரவெடி… கார்த்திக் சுப்புராஜின் தரமான சம்பவம் இருக்கு!

தீபாவளிக்கு சரவெடி… கார்த்திக் சுப்புராஜின் தரமான சம்பவம் இருக்கு!

-

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாபி சிம்ஹா வித்தியாசமான கேங்ஸ்டராக இந்தப் படத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அந்தப் படத்தின் பெரும் வரவேற்பை அடுத்து 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தாண்டா படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே‌.சூர்யா இருவரும் இந்தப் படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் மிரட்டியிருந்தனர். லாரன்ஸ் யானை முகத்தின் ரெபரென்ஸ் உடன் காணப்பட்டார்.

இந்நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தீபாவளி தினத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

MUST READ