பிச்சைக்காரன் திரைப்படம் சசி சார் போட்ட பிச்சை என்று விஜய் ஆண்டனி பேசியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழை விட தெலுங்கு மக்களை இந்தப் படம் அதிகம் கவர்ந்தது.
இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வரும் 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் பாரதிராஜா, பாக்யராஜ், சசி, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய விஜய் ஆண்டனி.
“நான் முன்பே சொன்னதுபோல, ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்குப் போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்” என்றார். பிச்சைக்காரன் படத்தின் விஜய் ஆண்டனி பிச்சை எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்பு படுத்தி சசி சார் போட்ட பிச்சை என்று பேசியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.