Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் 12 வயது சிறுமி மாயம்

கோவையில் 12 வயது சிறுமி மாயம்

-

- Advertisement -

கோவையில் 12 வயது சிறுமி மாயம்

கோவையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி மாயமான நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமி

கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சசிகலா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகரன் மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சசிகலா சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தேடியும் ஸ்ரீநிதி கிடைக்காத நிலையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மேலும் சிறுமி மாயமான போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

MUST READ