Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபு மேஜிக் எங்க போச்சு... கவலைக்கிடமான நிலையில் 'கஸ்டடி'!

வெங்கட் பிரபு மேஜிக் எங்க போச்சு… கவலைக்கிடமான நிலையில் ‘கஸ்டடி’!

-

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் வசூலில் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே 12 ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ‘கஸ்டடி‘. இப்படத்தில் கிருத்தி செட்டி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இத்திரைப்படம் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஏதாச்சும் புதுமையாக இருக்கும், மினிமம் கியாரண்டி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால் அந்த நம்பிக்கை இந்தப் படத்தில் பொய்யாகியுள்ளது.


அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் குறைந்த வசூலையே பெற்றிருப்பதாக என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். கதையும் இயக்கமும் மோசமாக இருப்பதாக பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் மிகக் குறைந்த அளவில் வசூல் செய்துள்ளது படக் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ