Homeசெய்திகள்தமிழ்நாடு10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் செய்த சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் செய்த சாதனை

-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் செய்த சாதனை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
File Photo

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3,976 மையங்களில் 9.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 10 ஆம் வகுப்பு பொத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், மாணவர்களை விட மாணவிகள் 6.5% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆங்கிலத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதேபோல் கணித பாடத்தில் 3,649 பேரும், அறிவியலில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் தமிழில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை.

மொழிப்பாடத்தில் 95.55% பேரும், ஆங்கிலத்தில் 98.8.93% பேரும், கணிதத்தில் 95.54% பேரும், அறிவியலில் 95.75% பேரும், சமூக அறிவியலில் 95.83% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

MUST READ