பழம்பெரும் நடிகை வசந்தா காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.
எம்கே தியாகராஜ பாகவதர் நாடகக் குழுவில் இருந்த பெற்ற பழம்பெரும் நடிகை வசந்தா வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். நீண்ட நாட்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 3:40 மணியளவில் காலமானார்.
நாடகம் வாயிலாக திரைத்துறையில் நுழைந்த பலரில் இவரும் ஒருவர். இவர் அசோகன், ஜெய் ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும், ‘இராணுவ வீரன்’ படத்தில் ரஜினியின் அம்மாவாகவும் நடித்திருந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 100-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை வசந்தா மறைவுக்கு திரையுலகை சார்ந்தவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதி சடங்கு இன்று மதியம் 1:30 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.