Homeசெய்திகள்இந்தியா"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!

“1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை”- ப.சிதம்பரம் ட்வீட்!

-

- Advertisement -

 

"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!
File Photo

2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டவை அல்ல. அதே நேரம் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் தான், 2,000 ரூபாய் நோட்டுகளை பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.

2,000 ரூபாய் நோட்டுகள் பிரபலமாகாது என்று அன்றே காங்கிரஸ் கட்சி கூறியது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்த முட்டாள் தனமான நடவடிக்கையை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை”- ப.சிதம்பரம் ட்வீட்!

இதனால் தான் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ