Homeசெய்திகள்இந்தியா"சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு"- வல்லுநர் குழு அறிக்கை!

“சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு”- வல்லுநர் குழு அறிக்கை!

-

 

"சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு"- வல்லுநர் குழு அறிக்கை!
File Photo

அதானி குழும பங்குகளின் விலைகள் பங்குச் சந்தைகளில் செயற்கையாக இறக்கி, ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!

அதானி குழும விவகாரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் (Hindenburg Research) மீது விசாரணை நடத்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜனவரி 24- ஆம் தேதி முதல் பிப்ரவரி 27- ஆம் தேதி வரை ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக, அதானி குழுமம், 12.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகவும், ஆனால் மார்ச் 9- ஆம் தேதி 10 லட்சம் கோடியாக இழப்பு குறைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

மேலும், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக, முன்கூட்டியே அறிந்து சில நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, லாபம் ஈட்டி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள சில்லறை முதலீட்டாளர்கள், சுமார் 3,700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகவும், பிற முதலீட்டாளர்கள் 22,000 கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்தித்ததாகவும் விசாரணை குழு தனதுகுறிப்பிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

MUST READ