Homeசெய்திகள்தமிழ்நாடுஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!

ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!

-

- Advertisement -

 

ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது!
File Photo

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று (மே 21) தொடங்குகிறது கோடை விழா.

எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சாதனை!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா இன்று (மே 21) மாலை 05.00 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள அண்ணா பூங்காவில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு, டைனோசர், கங்காரு, சோட்டா பீம் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வரும் மே 28- ஆம் தேதி வரை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு கோடை விழா நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி

சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி, மே 20- ஆம் தேதி பிற்பகல் 02.00 மணி முதல் அஸ்தம்பட்டி- கோரிமேடு வழியாக ஏற்காட்டிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோடை விழா முடிவடையும் வரை, ஏற்காடு- குப்பனூர் சாலை வழியாக கீழ் இறங்கும் வகையில், ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ