Homeசெய்திகள்சினிமா"தெலுங்கு திரை உலகில் பிச்சைக்காரன் 2 வசூல் சாதனை"

“தெலுங்கு திரை உலகில் பிச்சைக்காரன் 2 வசூல் சாதனை”

-

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.தற்போது பின் பிச்சைக்காரன் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ படத்தை
விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் காவியா தாபர், மன்சூர் அலிகான் , விஜய் தேவ், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இரண்டு நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது.

காதல், செண்டிமெண்ட், காமெடி, மாஸ் என அனைத்து காட்சிகளிலும் விஜய் ஆண்டனி மாஸ் காட்டியிருக்கிறாராம்.
இதில் விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காவியா தாபர், ஒய் ஜி மகேந்திரன், ராதா ரவி ஆகியோர் அவர்களின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் இசை,எடிட்டிங், ஒளிப்பதிவு இவை அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டது .
1500 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுடைய பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதால் 3.25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஆனால் தெலுங்கில் ‘பிச்சைஃகாடு 2’ என்று வெளியிடப்பட்ட திரைப்படம் ஒரே நாளில் 4.5 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதிலும் 15 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

MUST READ