
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஒரே அணிக்காக 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது.
திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 11,000 ரன்களையும் ரோஹித் சர்மா கடந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 61 பந்துகளில் 101 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்
இது ஐ.பி.எல். போட்டிகளில் விராட் கோலி அடித்த ஏழாவது சதமாகும். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் விராட் கோலி. ஆறு சதங்களுடன் கிறிஸ்கெயில் இரண்டாவது இடத்திலும், ஐந்து சதங்களுடன் ஜோஸ் பட்லர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.