Homeசெய்திகள்சினிமாமாஸுக்கெல்லாம் மாஸ்... சூப்பர் ஸ்டார் உடன் இணையும் தெலுங்கு மாஸ் நடிகர்!

மாஸுக்கெல்லாம் மாஸ்… சூப்பர் ஸ்டார் உடன் இணையும் தெலுங்கு மாஸ் நடிகர்!

-

- Advertisement -

தற்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

rajini-and-lokesh.jpg

அந்தப் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தை இயக்கயிருப்பதாகவும் அதற்காக ரஜினி கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் இயக்குனர் மிஷ்கினும் இதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினி உடன் தெலுங்கு நடிகர் பாலையாவும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி ஆனார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சாதாரண கதையம்சம் கொண்ட மசாலா படங்களை கூட தனது உடல் மொழி வசன உச்சரிப்பு மூலம் வசூலில் மிரள வைப்பவர் பாலகிருஷ்ணா. இவரது ஆக்சன் காட்சிகளை கலாய்த்து சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்கள் உலா வந்தாலும் சினிமாவில் வசூல் மன்னன் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார்.

நாயுடு (2001), சிம்ஹா (2010), மற்றும் லெஜண்ட் (2014) ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மூன்று மாநில நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது சமீபத்திய திரைப்படங்களான அகண்டா (2021) மற்றும் வீர சிம்ம ரெட்டி (2023) தெலுங்கு மொழியில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் மாஸ் காட்டியுள்ளன. தற்போது அவர் அணில் ரவிபுடி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ரஜினி உடன் பாலக்ரிஷ்ணா இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் சினிமாவையே வாய் பிளக்க வைத்துள்ளன. இப்படி நடந்தால் அதிரடி, சரவெடி, அதகளம் தான்.

இதற்கிடையில் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ