Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபுவின் தளபதி 68-ல் மீண்டும் இணையும் 'சுறா' கூட்டணி!

வெங்கட் பிரபுவின் தளபதி 68-ல் மீண்டும் இணையும் ‘சுறா’ கூட்டணி!

-

- Advertisement -

தளபதி 68 படத்தின் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து ‘தளபதி 68‘ படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கப் போகிறார். புதிய கீதை  படத்தை அடுத்து 20 ஆண்டுகள் கழித்து யுவன் விஜய் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது.

தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி 68-ல் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் மற்றும் தமன்னா இருவரும் ஏற்கனவே சுறா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமன்னா தற்போது மலையாளத்தில் ‘பாந்திரா’ படத்திலும் தெலுங்கில் ‘போலோ சங்கர்’ படத்திலும் தமிழில் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்து வருகிறார்.

MUST READ