Homeசெய்திகள்சினிமாசரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

-

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். அதன்பின்னர்  தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார்.

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்
சரத்பாபு, கமல்ஹாசன்

நடிகர் சரத்பாபு 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவராவர், நடிகர் கமல் மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். சரத்பாபு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது.

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்
சரத்பாபு

நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சரத்பாபு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த தினங்களில் என் மனதில் நிழலாடுகின்றன.

சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்
நடிகர் சரத்பாபு மற்றும் கமல்ஹாசன்

தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என்று மிக வருத்தமாக நடிகர் கமல்ஹாசன் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

MUST READ