சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல். சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. ஐ.பி.எல். போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட க்யூஆர் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, நடக்கவிருக்கும் ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐ.பி.எல். டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். பிளே ஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இடையூறு இல்லாத பயணத்திற்கு, பயணிகள் மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ் ஆப் (91- 8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், டிக்கெட் கவுண்டர்கள் இரவு 11.00 மணிக்கு பிறகு செயல்படாது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாற்றிக் கொள்ளலாம். ஏனெனில் நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு பயணிகள் மாறும் வசதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு 11.00 மணிக்கு பிறகு இருக்காது.
ஆகையால், நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.