Homeசெய்திகள்இந்தியாரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

-

- Advertisement -

 

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!
File Photo

2,000 ரூபாய் நோட்டுகளை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

கடந்த 2016- ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது. மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இதற்கான படிவத்தையும் வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதற்குரிய படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஒரு நாளில் ரூபாய் 20,000 அளவுக்கு ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!

வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

MUST READ