போர் தொழில் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்த அசோக் செல்வனும், பிரபல நடிகர் சரத்குமாரும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல் நடித்துள்ளார்.
அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ஜாப்ஸ் விஜய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வனும் சரத்குமாரும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரிகளான சரத்குமாரும் அசோக் செல்வனும் சைக்கோ கொலையாளியை தேடி வருகின்றனர். அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் சரத்குமார், ” தம் அடிச்சா கொஞ்ச நேரத்துல திரும்ப அடிக்கணும்னு தோணுதுல்ல அது போல தான் சீரியல் கொலைகாரனுக்கும், கொலை பண்றது ஒரு அடிக்ஷன். வத்தாத கிணறு மாதிரி தண்ணி எடுக்க எடுக்க ஊறிக்கிட்டே இருக்கும்என்ற அதிரடி வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இப்படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.