காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்து சுங்கச்சாவடி ஊழியர்கள்
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் , குடும்பத்துடன் காரில் வந்தவர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் காரில் வந்தவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி, விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக, திருமங்கலம் நகர் மக்கள் பலமுறை நீதிமன்றத்தில் போராடியும் , அகற்றப்படாமல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நண்பகலில் சென்னையில் இருந்து பிரபு என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் வந்த போது, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த பிரபு காரை நிறுத்திய போது, அந்த காரை மூன்றாவது வழித்தடத்தில் செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட இருவருக்கும் இடையே வாக்குவாதத்தில் அநாகரீகமாக பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும், இதனை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் பிரபுவை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி, சுங்கச்சாவடிக்கு வந்த மற்றொரு காரில் உள்ள நபர் வீடியோ எடுத்து வைரலாக வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த பிரபு என்பவரை , திருமங்கலம் நகர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.