Homeசெய்திகள்சிவகார்த்திகேயனுக்கு நான் தான் வில்லன்- மனம் திறக்கும் இயக்குனர் மிஷ்கின்

சிவகார்த்திகேயனுக்கு நான் தான் வில்லன்- மனம் திறக்கும் இயக்குனர் மிஷ்கின்

-

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாவீரன்.

இந்த படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அதிதி சங்கர், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பரத் ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் ‘மாவீரன்’ என்று தமிழிலும் ‘மாவீருடு’ என்று தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
மேலும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் நேற்று ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் மாவீரன் திரைப்படம் குறித்து பேசிய அவர், “நான் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் தாடியை கிளீன் ஷேவ் செய்து இப்போது நான் இருக்கும் தோற்றத்தில் தான் நடித்திருக்கிறேன். மாவீரன் படம் சிறப்பாக வந்துள்ளது” என்று பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ