மலையாள திரை உலகில் மோகன்லால் நடித்த புலி முருகன் மற்றும் லூசிபர் போன்ற திரைப்படங்கள் அதிவேகமாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அதனை டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற படம் முறியடித்துவிட்டது.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய 2018 என்ற திரைப்படம் கடந்த மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
கேரளாவில் மட்டுமே
இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னணி நடிகர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நடிகர்கள் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடைய மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.
மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் என்பது இன்றளவும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் கடந்த 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘புலி முருகன்’ திரைப்படம் மலையாள திரை உலகின் அதிகபட்ச வசூலான 137.35 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் பிறகு 2019 ஆம் ஆண்டில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த ‘லூசிபர்’ திரைப்படம், 50 நாட்களில் அதிகபட்ச வசூலான 200 கோடி வசூலித்தது.
தற்போது ஜூட ஆண்டனி ஜோசப் இயக்கிய 2018 திரைப்படம், திரைக்கு வந்த 19 நாட்களில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்து அதனை முறியடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் அதிகபட்ச வசூல் ஆனது 200 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.