Homeசெய்திகள்தமிழ்நாடுஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

ஜப்பான் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்து பேசினார். அத்துடன், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வருமாறு அழைப்பும் விடுத்தார்.

“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (மே 25) ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இதனிடையே, ஜப்பான் நாட்டின், கான்சாய் விமான நிலையத்திற்கு வருகை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஒசாகாவிற்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா மும்பை இந்தியன்ஸ்?- இன்று மோதல்!

தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் ஒசாகாவுக்கு சென்றுள்ளனர். .

MUST READ