Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 26) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ‘Airbag Inflator’ தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோவும், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணுவும் இ.ஆ.ப. கையொப்பமிட்டனர். இந்நிகழ்வின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., ஜப்பானுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி, டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிஹிரோ அவோகி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ