Homeசெய்திகள்சினிமாகவின்- அயோத்தி நடிகை கூட்டணியின் புதிய படம்... இன்று துவக்கம்!

கவின்- அயோத்தி நடிகை கூட்டணியின் புதிய படம்… இன்று துவக்கம்!

-

கவின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவின் வேகமாக வளர்ந்து வருகிறார். கவின் நடிப்பில் வெளியாகி வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைசியாக கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் மிகவும்  தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் கவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அயோத்தி நடிகை ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் கவினுக்கு ஜோடியாக  நடிக்கிறார்.  அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அதில் கவின், அனிருத், இயக்குனர் சதிஷ், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தில் நடிகை குஷ்பூ இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் கவினுக்கு அம்மாவாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கினும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

MUST READ