Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில், 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆசிய நாடுகளின் நுழைவு வாயிலான சென்னையில், 2024- ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், நெருங்கிய நட்பு நாடாக பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவுக்குள் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக விளங்குகிறது.

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உற்பத்திச் சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள், மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், உலக நாடுகள் தனித்து வளர்ந்து விட முடியாது; இந்தியா உடனான நல்லுறவை தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திட வேண்டும்.

2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?

பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், JETRO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பான் வணிகம் மற்றும் தொழில் பேரவை ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ