தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பான் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 26) ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
இந்த நிகழ்வின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
முன்னதாக, ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.