பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆளாத எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 27) காலை 11.00 மணிக்கு நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கே தெரியாமல் ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்- பொன்முடி
நிதி ஆயோக் கூட்டத்தில், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், மாநிலங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை, அந்தந்த மாநிலங்கள் கோரும். அத்துடன், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவைக் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசிக்கும் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.