Homeசெய்திகள்அரசியல்இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது - ஆசிம் ராஜா

இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது – ஆசிம் ராஜா

-

ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இது மக்கள் மன்றம், அதிகாரி மன்றம் கிடையாது என்று ஆவடி மாநகராட்சி ஒப்பந்தக் குழு தலைவர் ஆசிம் ராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது - ஆசிம் ராஜா
இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் நிறுத்திய சம்பவம் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்களே இப்படி நடந்துக் கொள்ளலாமா? இது அரசாங்கத்திற்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தாதா? என்று ஆவடி முழுவதும் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. அதில் திமுக உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர். கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 8 பேர், அதிமுகவை சேர்ந்த 2 பேர் என்று 48 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆவடி மாநகராட்சியில் மாதமாதம் நடைபெறக் கூடிய மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முறையாக நடைபெறாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று சம்பரதாயக் கூட்டமாக ஆளும் கட்சியினர் மாற்றி விட்டனர்.

இந்நிலையில் மே மாதம் 25ந் தேதி மேயர் உதயக்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக 48 வார்டு உறுப்பினர்களுக்கும்  முறையாக அதிகாரிகள் அழைப்பு அனுப்பியிருந்தனர்.

இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது - ஆசிம் ராஜா
இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது

மன்றக் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து கலந்துக் கொண்டனர். மேயர் உதயகுமார் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இதில் துணை மேயர் சூரிய குமார்,கூடுதல் ஆணையர் விஜயகுமாரி, மாநகராட்சி உறுப்பினர்கள்,துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  மன்றத்தின் ஒப்புதலுக்காக 137 தீர்மானங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானங்கள் அனைத்தும் எங்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்ததாக கூறி 42வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரின் மகன் ஆசிம் ராஜா கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் எழுந்து அனைத்து தீர்மானங்களும் மேயரின் ஒப்பதல் கையெழுத்தோடுதான் கொண்டுவரப் பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

4 வது வார்டு உறுப்பினரும் முன்னாள் அமைச்சரின் மகன் ஆசிம்ராஜா எழுந்து “இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் என கடுமையாக விவாதம் செய்தார். இதையடுத்து மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தை மேயரே ரத்து செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கூட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது,மேயருக்கு தெரிந்து, மேயர் கையெழுத்திட்டு, அவருடைய அனுமதியோடுதான் இந்த கூட்டம் தொடங்கியது. மேயர் கையெழுத்து இல்லாமல் இந்த கூட்டத்தை நடத்த முடியாது. ஆனால் மண்டல குழு தலைவர், அமைச்சரின் மகன் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தை ரத்து செய்யப்படுவதாக  மேயர் அறிவித்தார். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மக்களுக்கு தான் பாதிப்பு, மக்கள் பணிகள் தான் தடைப்படும் என்று முடித்துக் கொண்டனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி மாநகர செயலாளரும்  ஆவடி மாநகராட்சி 10வது வார்டு உறுப்பினருமான தோழர் ஜான் என்பவரிடம் பேசும் போது, அதிகாரிகள் தான்தோன்றிதனமாக செயல்படுகிறார்கள். அவர்கள் உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை.

இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது - ஆசிம் ராஜா
தோழர் ஜான்

உறுப்பினர்களின் கோரிக்கையை, மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்பதும் இல்லை. ஆவடி மாநகராட்சியில் மேயர் மற்றும்  நான்கு மண்டலக் குழு தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் நடந்து கொள்வதால் இதுபோன்று மோதல்போக்கு தொடங்கியுள்ளது என்றார். மேலும் வரும் காலங்களில் ஆணையர், மேயர், மண்டலக் குழு தலைவர்கள் கலந்துப்பேசி இதுபோன்ற முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

MUST READ