Homeசெய்திகள்சினிமா50-வது படம் இலக்கை அடைந்த அஞ்சலி... வெளியான பர்ஸ்ட் லுக்!

50-வது படம் இலக்கை அடைந்த அஞ்சலி… வெளியான பர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

நடிகை அஞ்சலியின் 50 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் அஞ்சலி. இவர் தமிழில் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, மங்காத்தா, அங்காடித்தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


சமீபத்தில் பாவ கதைகள், ஜான்சி மற்றும் ஃபால் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான இரட்ட என்னும் மலையாள திரைப்படத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார்.

இவ்வாறு அஞ்சலி திரையுலகில் நுழைந்து 17 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார். கிரீன் அம்யூஸ்ட்மென்ட் மற்றும் டி3 ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் ‘ஈகை’ என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் குடைகளுக்கு நடுவே அஞ்சலி திரும்பி பார்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் விறுவிறுப்பான த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ