Homeசெய்திகள்கட்டுரைமுதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் - 4

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4

-

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்
-என்.கே.மூர்த்தி

எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல, தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்போறியே. 
                                                                                             -சாக்ரடீஸ்

ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் தேவையற்ற நண்பர்களின் தவறான பழக்கத்தினால் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வுக்கு தயாராகாமல் காலத்தை விரையமாக்கி விட்டான். அவன் வகுப்பிற்கு போகாமல் ஊர் சுற்றுவது போன்ற எந்த  தவறுகளும் அவனுடைய பெற்றோருக்கு தெரியாது. கடைசியாக இறுதி தேர்வுக்கு இன்னும்  20 நாட்கள் மட்டுமே இருந்தது. ஒழுங்காக வகுப்பிற்கு செல்லாததால் அந்த மாணவனுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. மேலும் ஆசிரியர்கள் அவனுடைய பெற்றோரை அழைத்து வர சொல்லி அனுப்பி விட்டார்கள்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- 4

அந்த மாணவன் பயந்து விட்டான். பெற்றோருக்கு தேரிந்தால் அடித்துவிடுவார்கள். ஒரு வருடம் நான் படிக்காமல் ஊர் சுற்றினேன் என்று தெரிந்தால் தன்னுடைய தாயார் மிகவும் வேதனைப்படுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மாணவன் மனதளவில் உடைந்து விட்டான். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

 விதைத்தால் அறுவடை செய்யலாம் – 3

இதனை நுட்பமாக கவனித்தார் அவனுடைய வகுப்பாசிரியர். மாணவனை அழைத்து மெதுவாக பேசினார். சிறிய வயதில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏதாகிலும் செய்துக் கொள்வானோ? என்று ஆசிரியருக்கு அச்சம் இருந்தது. அதனால் அவனை அருகில் அழைத்து ஆறுதல்படுத்தினார்.  ஆசிரியரின் அரவனைப்பு அவனுக்கு இதமாக இருந்தது. சார், நான் எப்படியாவது பாசாகனும்கண்ணில் நீர் முட்ட கலங்கி நின்றான். “கவலைப்படாதப்பா, நீ நிச்சயம் இந்த தேர்வில் பாசாயிடுவ, அதுமட்டுமல்ல நீ மனசு வச்சா கூடுதலாகவும் மார்க் வாங்க முடியும்.” என்று நம்பிக்கையை ஊட்டினார்.

பொது தேர்விற்கு 16 நாட்கள் மட்டுமே இருந்தது. அதுவரை புத்தகத்தை தொடாத அந்த மாணவன் அப்பொழுது தான் படிக்க தொடங்கினான். படித்தான். படித்தான். படித்துக் கொண்டே இருந்தான். பயமே இல்லாமல் தேர்வு எழுதினான்.

என்ன ஆச்சர்யம்! அந்த ஆண்டு அந்த மாணவன் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றன். மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து பாராட்டை பெற்றான்.

எப்படி இது சாத்தியம் என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- 4

நான் இந்த தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டேன். அதனை என் மன திரையில் திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டேன். அப்படியே ஒரு திரைப்படம் போல் கற்பனையாக மனதிற்குள் ஓட்டினேன். அதுவே என் வெற்றிக்கு காரணம்என்றான். நினைத்தது போலவே மாற்றங்கள் நிகழும் இது தான் நடைமுறை விதி!

எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு – 2

நமது தேவை என்ன என்று முடிவு செய்ய வேண்டும். அதனை மனக்காட்சியில் கொண்டு வர வேண்டும். வீடு கட்டுவதற்கு வரைபடம் தயாரிப்பது போல் நமது தேவைகளை மனக்காட்சிப்படுத்தினால் உறுதியாக வெற்றி தேடி வரும்.

                                                                                                     – தொடரும்..

MUST READ