Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் 4-வது நாளாக சோதனை

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் 4-வது நாளாக சோதனை

-

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் 4-வது நாளாக சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர், நண்பர்கள் வீடுகளில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதேபோல் செந்தில் பலாஜியின் நண்பர் அரவிந்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடை பெற்றுவருகிறது. கரூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காந்திகிராமம் பகுததியில் உள்ள பிரேம்குமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடத்திவருகின்றனர்.

முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்தின் எம்.சாண் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. பொள்ளாச்சி அருகே பணப்பட்டியில் உள்ள எம்.சாண்ட் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக சோதனை நடைபெற்றுவந்தது குறிப்பிடதக்கது.

MUST READ