Homeசெய்திகள்விஜய் படத்தில் இணையும் நடிகை பிரியா பவானி ஷங்கர்!

விஜய் படத்தில் இணையும் நடிகை பிரியா பவானி ஷங்கர்!

-

- Advertisement -

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் விஜயின்புதிய படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் தொடங்கி மேயாத மான் படத்தின் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தி, எஸ் ஜே சூர்யா, தனுஷ், ராகவா லாரன்ஸ், அருண் விஜய், சிம்பு, உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதைத்தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 68 யில் விஜயுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68-ல் விஜய் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா அல்லது க்ரித்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் இணைய இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்தப் படம் குறித்த கூடுதல் அப்டேட்கள் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ